

சேலம்:
சேலம் தெற்கு வனசரகத்துக்கு உட்பட்ட ஜல்லூத்துப்பட்டி, ஜருகுமலை, தேக்கம்பட்டி வனப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதா? என்று வனத்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
வனசரகர் தலைமையில் வனஊழியர்கள் ஜல்லூத்துப் பட்டி வனப்பகுதியில் ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு ஒரு விவசாயி வனப்பகுதியை யொட்டியுள்ள நிலத்தை ஆக்கிரமித்து இருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அந்த விவசாயியை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர் ஊஞ்சக்காடு பகுதியை சேர்ந்த முருகேசன் என்பதும், வனப்பகுதியை ஆக்கிரமித்து இருந்ததும் தெரிந்தது. இதையடுத்து அந்த விவசாயிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.