சேலம், நாமக்கல்லில் மிதமான மழை பெய்யும் வானிலை மையம் தகவல்

வருகிற 23, 24-ந்தேதிகளில் சேலம், நாமக்கல்லில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
.
.
Published on

சேலம்:

தமிழக  வளி மண்டல மேல் அடுக்கு,  கீழடுக்கு பகுதிகளில் நிலவும் சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக,   நாளை மறுநாள் (23-ந்தேதி) சேலம், நாமக்கல், கோயம்புத்தூர், திருப்பூர், தர்மபுரி மாவட்டங்களில் லேசான, மிதமான மழை  பொழிவு இருக்கும். 

மேலும் 24-ந்தேதி  மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள்  மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், சேலம், நாமக்கல், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, டெல்டா மாவட்டங்களில் லேசான, மிதமான மழை பெய்யக்கூடும். இந்த தகவலை சேலம் மாவட்ட வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com