

காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் காடையாம்பட்டியை அடுத்த கே. மோரூர் லேண்ட் காலனி பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ்-சத்திய பிரியா தம்பதியரின் மகள் பிரதியுக்ஷா(வயது 9), மகன் கவியரசு (6). லேண்ட் காலனி அரசு தொடக்கப் பள்ளியில் பிரதியுக்ஷா 4-ம் வகுப்பும், கவியரசு 1-ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.
இவர்கள் இருவரும் கோவா காளன்கோட்டில் சென் ஜோசப் உயர்நிலைப் பள்ளியில் தேசிய அள-விலான பள்ளி விளையாட்டு மேம்பாட்டு அமைப்பு சார்பில் நடைபெற்ற கராத்தே மற்றும் சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டனர்.
இதில் பிரதியுக்ஷா 10 வயதுக்கு உட்பட்டோருக்-கான சிலம்பம் மற்றும் கராத்தே போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்தார். அதேபோல் 8 வயதுக்குட்பட்டோருக்கான கவியரசு கராத்தே போட்-டியில் தங்கப் பதக்கமும் சிலம்பம் போட்டியில் வெள்-ளிப் பதக்கமும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
சாதனை படைத்த பிரதியுக்ஷா மற்றும் கவியரசு ஆகிய இருவரும் தெற்காசிய அளவிலான சிலம்பம் மற்றும் கராத்தே போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அரசு தொடக்கப் பள்ளியில் படித்து வரும் அக்கா-தம்பி ஆகிய இருவரையும் பள்ளியின் தலைமை ஆசிரியர் புவனேஸ்வரி மற்றும் பள்ளி ஆசிரிய,ஆசிரியைகள் பெற்றோர்கள் ஊர் பொது-மக்கள் பாராட்டினர்.
பிரதியுக்ஷா ஏற்கனவே திருப்பூரில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான தமிழ்நாடு கேரளா கர்நாடகா மாநிலங்கள் பங்கேற்ற ஏழாவது சோபூடாய் ஓபன் சாம்பியன் லீக் 22 கராத்தே போட்டியில் கட்டா பிரிவில் கலந்துகொண்டு முதல் பரிசு பெற்று உள்ளார் என்பதும் மற்றும் சேலம், மதுரை ஆகிய இடங்களில் சிலம்பப் போட்டியில் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சாதனை படைத்துவரும் அக்காள்-தம்பிக்கு பொதுமக்களிடையே பாராட்டு குவிந்து வருகிறது.