சங்ககிரி போலீஸ் நிலையத்தில் கிருமி நாசினி தெளிப்பு

4 போலீசாருக்கு கொரோனா தொற்றுபாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து சங்கிரி போலீஸ் நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
.
.
Published on

சங்ககிரி:

சேலம் மாவட்டம், சங்ககிரி போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்  திருமுருகன் மற்றும் தலைமை காவலர் காமராஜ், போலீசார்கள் கணேசன், ரேவதி ஆகியோர்களுக்கு கடந்த சில தினங்களாக சளி, இருமல் காய்ச்சல் இருந்தது. 

இதனையடுத்து சங்ககிரி அரசு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  இதையடுத்து அவர்கள் அனைவரும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். 

இதையடுத்து சக போலீசாருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து சங்ககிரி பேரூராட்சி தூய்மைப்பணியாளர்கள் போலீஸ் நிலையத்தை சுற்றிலும் சுத்தம் செய்து கிருமி நாசினி தெளித்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com