ரூ.38.30 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

வாழப்பாடியில் ரூ.38.30 லட்சத்திற்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.
.
.
Published on

வாழப்பாடி:

வாழப்பாடி பகுதி விவசாயிகள் இறுதிக் கட்ட பருத்தி அறுவடை வருகின்றனர். வாழப்பாடி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், புதன்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு, பல்வேறு பகுதியை சேர்ந்த 318 விவசாயிகள், 1,070 மூட்டை பருத்தி விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். 

ஒரு குவிண்டால் ஆர்.சி.எச். ரக பருத்தி, ரூ.9,699 முதல் ரூ.12,616 வரையும், டி.சி.எச். ரக பருத்தி ரூ.10,099 முதல் ரூ.13,399 வரையும் விலை போனது. நேற்று ஏலத்தில், வாழப்பாடி கிளை கூட்டுறவு விற்பனை சங்கத்தில், ரூ.38.30 லட்சத்திற்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com