சேலத்தில் மகளிர் தினத்தையொட்டி சமையல் போட்டி

மகளிர் தினத்தை முன்னிட்டு சேலத்தில் இன்று சமையல் போட்டி நடைபெற்றது.
விழாவில் சேலம் கலெக்டரின் நேர்முக உதவியாளர் அமுதவல்லி பங்கேற்று உணவு வகைகளை சுவைத்து மதிப்பெண்கள் வழங்கிய காட்
விழாவில் சேலம் கலெக்டரின் நேர்முக உதவியாளர் அமுதவல்லி பங்கேற்று உணவு வகைகளை சுவைத்து மதிப்பெண்கள் வழங்கிய காட்
Published on

சேலம்:

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மகளிர் தினத்தையொட்டி சமையல் போட்டி, கோல போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. 

இதில் இன்று சமையல் போட்டி நடந்தது.  போட்டியில்  வருவாய்த்துறையில் வேலை பார்க்கும் பெண் அலுவலர்கள் கலந்து கொண்டு பல்வேறு விதமான உணவு வகைகளை சமைத்து பார்வைக்கு வைத்தனர்.

 இந்த நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் அமுதவல்லி நடுவராக பங்கேற்று உணவை சுவைத்துப் பார்த்து சிறந்த உணவு வகைகளுக்கு மதிப்பெண்களை வழங்கி தேர்வு செய்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com