மரத்தில் ஏறி சீரியல் லைட் கட்டிய வாலிபர் மின்சாரம் தாக்கி பலி

ஏற்காடு அருகே மரத்தில் ஏறி சீரியல் லைட் கட்டிய வாலிபர் மின்சாரம் தாக்கி பலியானார்.
பலியான ஆனந்த்.
பலியான ஆனந்த்.
Published on

ஏற்காடு,

ஏற்காடு அருகே உள்ள புதூர் கிராமத்தில் உள்ள கரிய ராமர் மற்றும் இளைய ராமர் கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று மதியம் மாரமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஆனந்த் (வயது 24) என்பவர் அரச மரத்தில் சீரியல் லைட் கட்டிக்கொண்டு இருந்தார். 

அப்போது எதிர்பாராதவிதமாக அருகில் உள்ள மின்கம்பத்தில் மும்முனை மின் இணைப்பில் அவரது கை உரசியது. இதனால் மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார். இதனைத்தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு பரிசோதனை செய்ததில் ஆனந்த் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார் என்பது தெரியவந்தது. 

இதையடுத்து ஏற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தினால் மாரமங்கலம் கிராமமே சோகத்தில் உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com