சேலத்தில் மேம்பால தடுப்பு சுவரில் ஆம்னி வேன் மோதி 6 வாலிபர்கள் காயம்

சேலத்தில் மேம்பால தடுப்பு சுவரில் ஆம்னி வேன் மோதி 6 வாலிபர்கள் காயம் அடைந்தனர்.
.
.
Published on

சேலம்:

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் திப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 28).  இவர் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன்  மதுரைக்கு சென்று விட்டு மதுரையில் இருந்து ஆம்னி வேனில் சொந்த ஊருக்கு திரும்பினர். சேலம் வழியாக தருமபுரியை நோக்கி வேன் சென்று கொண்டிருந்தது.  வேனை பிரபாகரன் ஓட்டினார்.

நள்ளிரவு 12.30 மணி அளவில் திருவாக்கவுண்டனூர்  ரெயில்வே மேம்பாலத்தில் சென்றபோது திடீரென ஆம்னி வேன் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தாறுமாறாக ஓடி ரெயில்வே மேம்பாலத்தின் தடுப்புச்சுவரில் ஆம்னி வேன் பயங்கரமாக மோதியது.  

இந்த விபத்தில் பிரபாகரன் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்களான தருமபுரி மாவட்டம் நாகனம்பட்டி பகுதியை சேர்ந்த ெஜயசந்திரன் (வயது 26), பாலக்கோடு ரஞ்சித்குமார் (27), காரிமங்கலம் பகுதியை சேர்ந்த சூர்ய பிரகாஷம் (42), பூபதி (26), குமரேசன் (24)  ஆகியோர் காயம் அடைந்தனர். 

அவர்களை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.  காயம் அடைந்த 6 பேருக்கும் அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com