குழந்தைகளுக்கு சுவையான உணவு தயாரித்துவழங்கிய சமையலருக்கு பாராட்டு

முண்டகம்பாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளில் கலெக்டர் கார்மேகம் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.குறித்த நேரத்தில் சமைத்து வழங்கிய சமையலர் சோனியாவிற்கு பாராட்டி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
முண்டகம்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சமையலர்  சோனியாவிற்கு கலெக்டர் கார்மேகம்  சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்த காட்சி. 
முண்டகம்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சமையலர் சோனியாவிற்கு கலெக்டர் கார்மேகம் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்த காட்சி. 
Published on

சேலம்:

ஏற்காட்டில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்ட செயல்பாடுகள் குறித்து முண்டகம்பாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளில் கலெக்டர் கார்மேகம் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இப்பள்ளியில் குழந்தைகளுக்கு காலை உணவினை தரமாகவும், சுவையாகவும், குறித்த நேரத்தில் சமைத்து வழங்கிய சமையலர் சோனியாவிற்கு பாராட்டி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

மேலும், காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து பள்ளிகளிலும் நாள்தோறும் தொடர் ஆய்வுகள் மேற்கொண்டு, திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com