நாமக்கல் அருகே ரேக்ளா போட்டி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி பிறந்த நாள் விழா மற்றும் பொங்கல் விழாவை முன்னிட்டு குதிரை ரேக்ளா போட்டி நடைபெற்றது. மோகனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் நவலடி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.
ரேக்ளா போட்டி நடந்தபோது எடுத்த படம்.
ரேக்ளா போட்டி நடந்தபோது எடுத்த படம்.
Published on

நாமக்கல்:

நாமக்கல் கிழக்கு மாவட்டம் மற்றும் மோகனூர் ஒன்றிய தி.மு.க. சார்பில், என்.புதுப்பட்டியில், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி பிறந்த நாள் விழா மற்றும் பொங்கல் விழாவை முன்னிட்டு குதிரை ரேக்ளா போட்டி நடைபெற்றது.

மோகனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் நவலடி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். சிறிய, புதிய மற்றும் பெரிய குதிரைகளுக்கான போட்டிகள் தனித்தனியாக நடத்தப்பட்டது. பெரிய குதிரை போட்டியில் கரூர், மோகனூர், கோவை குதிரைகள் முறையே முதல் 3 இடங்களைப் பிடித்தன.

சிறிய குதிரைகளுக்கான போட்டியில், கோவை, மோகனூர், குமாரபாளையம் குதிரைகள் முதல் 3 இடங்களை பிடித்தன. வெற்றி பெற்ற குதிரைகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

எம்.எல்.ஏக்கள் நாமக்கல் ராமலிங்கம், சேந்தமங்கலம் பொன்னுசாமி, இளைஞரணி துணைச்செயலாளர் ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வெற்றி பெற்ற குதிரைகளுக்கு பரிசுக்கான ரொக்கம் மற்றும் கோப்பைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வேலு பாலாஜி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com