பா.ம.க. வாக்குச்சாவடி களப்பணியாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம்

அன்புமணி ராமதாஸ் பங்கேற்புஅனைவரும் கலந்து கொள்ள அழைப்பு
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கலவை:

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, ஆற்காடு சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி களப்பணியாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இந்த கலந்துரையாடல் கூட்டம் வருகிற 25-ந் தேதி சனிக்கிழமை, மாலை 2 மணிக்கு ராணிப்பேட்டையில் இருந்து அம்மூர் சாலையில் உள்ள முத்துக்கடை எஸ்.கே. மஹாலில் நடக்கிறது. கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு, வாக்குச்சாவடி களப்பணியாளர்கள், கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகள், சார்பு அமைப்பு நிர்வாகிகள், மூத்த நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள் ஆகியோருடன் கலந்துரையாடுகிறார்.

பின்னர் அவர் கூட்டத்தின் நோக்கம் குறித்தும், பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் திட்டங்கள் குறித்தும், வருகிற நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும், கட்சியை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆகியவைகள் குறித்தும் விளக்கி பேசுகிறார்.

ராணிப்பேட்டையில் நடைபெறும் கலந்துரையாடல் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொள்ளும், கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்க்கு சிறப்பான முறையில் வரவேற்கும் வகையில் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி, கிளை நிர்வாகிகள், வன்னியர் சங்கம், இளைஞர் சங்கம், மாணவர் சங்கம், மகளிர் சங்கம், பாட்டாளி இளம்பெண்கள் சங்கம், அன்புமணி தம்பிகள் படை, அன்புமணி தங்கைகள் படை, பாட்டாளி சமூக ஊடகப்பேரவை, பசுமைத் தாயகம், தேர்தல் பணி குழு, தமிழ்நாடு உழவர் பேரியக்கம், சிறுபான்மை பிரிவு, கொள்கை விளக்க அணி, பாட்டாளி தொழிற்சங்கம், கலை இலக்கிய அணி, சமூக முன்னேற்ற சங்கம், வக்கீல் சமூக நீதிப்பேரவை ஆகிய சார்பு அமைப்பு நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள், மூத்த முன்னோடிகள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவரும் தவறாது கலந்துரையாடல் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com