வரி செலுத்துவோர் எண்ணிக்கை குறைவு

ராமநாதபுரத்தில் தவணை முறையில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை குறைவாக உள்ளது என மண்டல வருமானவரி உதவி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.
வரி செலுத்துவோர்
வரி செலுத்துவோர்
Published on

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் வரி செலுத்துவது குறித்த விழிப்புணர்வு கலந்து ரையாடல் வர்த்தக சங்கத்தலைவர் ஜெகதீசன் தலைமையில் நடந்தது.

ராமநாதபுரம் வருமானவரித்துறை அலுவலர் நடராஜன், வருமானவரி ஆய்வாளர் முத்துசாமி முன்னிலை வகித்தனர். 

இதில் மதுரை மண்டல வருமானவரித்துறை உதவி ஆணையர் சதீஷ்பாபு பேசியதாவது:-

வரியை முறையாகச் செலுத்தாமல் சேமிக்கப்படும் பணம் கருப்பு பணமாகவே கருதப்படும். வரியை முறையாகச் செலுத் துவோரின் பணமே உண்மையான மூலதனமாகிறது. தொழிலையும் மேம் படுத்த அது உதவுகிறது. 

கணினிமயமான சூழலில் அனைவரும் உண்மைத்தன்மையுடன் வரியை செலுத்த முன்வர வேண்டும். அரசு ஜூன், செப்டம்பர், டிசம்பர், மார்ச் ஆகிய மாதங்களில் தவணை முறையில் வரியை செலுத்த வாய்ப்பு வழங்குகிறது.

கடந்த ஆண்டை ஒப்பிடு கையில் தவணை முறையில் வரியை செலுத்தி வந்தவர்களின் எண்ணிக்கை 100 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக குறைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

தவணை முறையில் வரி செலுத்துவோர் கூடுதலாகச் செலுத்தினால், அதற்கு அரசு கூடுதல் வட்டி அளித்து திரும்ப தந்துவிடும். வரியை முறையாகச் செலுத்தாமலிருப்பது கண்டறியப்பட்டால் கூடுதலாக வட்டி விதித்து அபராதமும் விதிக்கப்படும். வரி செலுத்தும் கடைசி நாள் வரை காத்திராமல் முன்னதாகவே வரியை செலுத்த அனைவரும் முன்வரவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். 

வருகிற 15ந்தேதிக்குள் வரியை சம்பந்தப்பட்ட வர்த்தகர்கள் செலுத்த வேண்டும் என கூட்டத்தில் அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர். வர்த்தக சங்க நிர்வாகிகளுக்கு வரி செலுத்துவதில் உள்ள சந்தேகங்களுக்கு வருமானவரி அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com