

சாயல்குடி
சாயல்குடி அருகே எஸ். வாகைக்குளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 45 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் இப்பள்ளிகள் 2 கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.
ஒரு கட்டிடத்தில் ஒன்று முதல் 3 வகுப்புகள் செயல்பட்டு வருகிறது. இன்று பள்ளி வேளையில் மேற்கூரையில் இருந்த கம்பு மாணவ மாணவிகளின் மேல்விழுந்ததில் நான்காம் வகுப்பு மாணவி வைஷ்ணவி, இரண்டாம் வகுப்பு மாணவர்கள் மாணிக்கம், அகிலேஷ் கண்ணன், ஆகிய மூன்று பேர் காயமடைந்தனர்.
அருகிலிருந்த கிராமத்தினர் அவர்களை சாயல்குடி அரசு ஆரம்ப நிலையத்தல் சேர்த்தனர். அங்கு 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து சாயல்குடி போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.