வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கணிப்பாய்வு குழு கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கணிப்பாய்வு குழு கூட்டம் நடந்தது.
ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கணிப்பாய்வு குழுக்கூட்டம் அதன் தலைவர் நவாஸ்கனி எம்.பி. தலைமை
ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கணிப்பாய்வு குழுக்கூட்டம் அதன் தலைவர் நவாஸ்கனி எம்.பி. தலைமை
Published on

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கணிப்பாய்வுக் குழுக்கூட்டம் கணிப்பாய்வுக் குழுத் தலைவர் நவாஸ்கனி எம்.பி. தலைமையில் நடந்தது.  மத்திய அரசின் திட்டங்கள் நிறைவேற்றப்படுவதை மாவட்ட அளவில் கண்கா ணித்து நிறைவேற்றுவது மற்றும் ஆலோசனைகள் வழங்குவது மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் நோக்கமாகும். 

மத்திய அரசின் திட்ட ப்பணிகள் செயல்படுத்தும்போது ஏற்படும் இடர்களை சரியான நேரத்தில் களைந்து அதற்கான தீர்வு கண்டு பணிகளை சிறப்பாக நிறைவேற்ற மாவட்ட நிர்வாகத்திற்கு வழிகாட்டியாக இந்தக்குழு செயல்படுகிறது.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வேளாண்மை துறை, கால்நடை பராமரிப்பு துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, கூட்டுறவுத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்  துறைகளின் திட்டங்களின் பயன்பாடு முன்னேற்றம் மற்றும் செயல்பாடுகள் குறித்து துறை அலுவலர்கள் எடுத்துரைத்தனர்.

தேசிய அளவில் சிறப்பாக செயல்பட்ட ஊராட்சிகளுக்கு மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் அமைச்சகம் சார்பில் வழங்கப்பட்ட விருதுகளை பெற்ற ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மண்டபம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் மற்றும் சாத்தனூர் கிராம ஊராட்சித் தலைவர் ஆகியோர் கண்காணிப்பு குழுத் தலைவர் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் விருதுகளை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

இந்த நிகழ்வில் கலெக்டர் சங்கர்லால் குமாவத், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன்குமார், வன உயிரின காப்பாளர் ஜக்தீஷ் பகான் சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் குமரேசன், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் திசைவீரன், மாவட்ட ஊராட்சி குழுத் துணை தலைவர் வேலுச்சாமிஉள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com