அலுவலக கட்டிடம் கட்ட பூமிபூஜை

அலுவலக கட்டிடம் கட்ட பூமிபூஜை நடந்தது. ஊராட்சி மன்றத் தலைவர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அலுவலக  கட்டிடம் கட்ட பூமிபூஜை
Published on

ராமநாதபுரம்

ராமநாதபுரம் ரெயில்வே பீடர் ரோட்டில் போக்குவரத்து பணிமனை அருகே யூனியன் அலுவலகம் அமைந்துள்ளது.

இந்த அலுவலகம் 1963-ம் ஆண்டு கட்டப்பட்டு பழுதடைந்து நிலையில் இருந்து வந்தது. அடிக்கடி கட்டிட கூரைகள் இடிந்து விழுந்தன. பழைய கட்டிடம் முழுமையாக இடிக்கப்பட்டு ரூ.3.67 கோடி செலவில் 2 மாடிகளுடன் புதிய அலுவலக கட்டிடம் கட்டப்பட உள்ளது.

பழைய கட்டிடத்தை இடிக்கும் பணி நிறைவடைந்ததை தொடர்ந்து புதிய கட்டிடத்துக்கான பூமி பூஜை யூனியன் தலைவர் கே.டி.பிரபாகரன் தலைமையில் நடந்தது.

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ், சேவுகப் பெருமாள் முன்னிலை வகித்தனர். பொறியாளர்கள் அர்ஜுனன், கணபதி மற்றும் கவுன்சிலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com