நல்லாசிரியர் விருது பெற்றவருக்கு பாராட்டு

கீழக்கரையில் நல்லாசிரியர் விருது பெற்றவருக்கு பாராட்டு அளிக்கப்பட்டது. இதில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நல்லாசிரியர் விருது பெற்றவருக்கு பாராட்டு
Published on

கீழக்கரை

தமிழக அரசு சாா்பில் ஆண்டுதோறும் ஆசிரியா் தினத்தை முன்னிட்டு சிறந்த ஆசிரியர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது. அதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த 11 ஆசிரியா்களுக்கு நடப்பு கல்வி ஆண்டில் (2021-22) நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. திருப்புல்லாணி ஒன்றியம் பெரியபட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றும் முத்துக்குமார் மாநில நல்லாசிரியர் விருது பெற்றார்.

இதையடுத்து பெரியபட்டினம் ஊராட்சி தலைவர் அக்பர் ஜான் பீவி தலைமையில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பைரோஸ்கான் முன்னிலையில் அனைத்து கவுன்சிலர்கள் நல்லாசிரியர் முத்துக்குமாருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்தினர். இதில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக நல்லாசிரியர் முத்துகுமார், கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து மற்றும் கல்வி அலுவலர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com