சதக் பாலிடெக்னிக் கல்லூரி வேலைவாய்ப்பு முகாமில் 120 மாணவர்கள் தேர்வு

சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 120 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி துணைமுதல்வர் சேக்தாவூது, கல்லூரி வேலைவாய்ப்பு பிரிவு ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
சதக் பாலிடெக்னிக் கல்லூரி வேலைவாய்ப்பு முகாமில் 120 மாணவர்கள் தேர்வு
Published on

கீழக்கரை

கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் சென்னை பாடி லூகாஸ் டி.வி.எஸ். நிறுவனம் வேலைவாய்ப்பு பிரிவு சார்பில் 3-ம் ஆண்டு எந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல் மாணவர்களுக்கு வளாக நேர்முகத்தேர்வு நடந்தது. கல்லூரி முதல்வர் அலாவுதீன் தலைமை தாங்கினார். கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலர் கணேஷ்குமார் வரவேற்றார். சென்னை லூகாஸ் டி.வி.எஸ். துணைமேலாளர் ரசீத், எச்.ஆர்.அலுவலர் சந்தானம் ஆகியோர் தங்கள் நிறுவனத்துக்கு மாணவர்களை தேர்வு செய்தனர். முகாமில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த வேலை வாய்ப்பு முகாமில் 120 மாணவர்கள் சென்னை லூகாஸ் டி.வி.எஸ். நிறுவனத்திற்கு தேர்வு செய்யப்பட்டனர். முன்னாள் வேலைவாய்ப்பு அலுவலர் மரியதாஸ் நன்றி கூறினார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி துணைமுதல்வர் சேக்தாவூது, கல்லூரி வேலைவாய்ப்பு பிரிவு ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com