ராமநாதபுரம் மாவட்டத்தில் 79 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை

ராமநாதபுரம் மாவட்டத்தில் 79 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது.
வாக்குச்சாவடிகள்
வாக்குச்சாவடிகள்
Published on

ராமநாதபுரம்

ராமநாதபுரம் நகராட்சியில் உள்ள 63  வாக்குச்சாவடிகள், கீழக்கரை நகராட்சியில் உள்ள 43 வாக்குச்சாவடிகள், பரமக்குடி நகராட்சியில் உள்ள 83 வாக்குச்சாவடிகள், ராமேசுவரம் நகராட்சியில் உள்ள 42 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 231 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

இதில் கீழக்கரை நகராட்சியில் 13 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச் சாவடிகளாகவும், 2 மிகவும் பதற்றமான வாக்குச் சாவடிகளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பரமக்குடி நகராட்சியில் 6 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளாகவும், ராமநாதபுரம் நகராட்சியில் 5 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாகவும், 11 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமான வாக்குச் சாவடிகளாகவும் அறிவிக் கப்பட்டுள்ளது.

மேலும் ராமேசுவரம் நகராட்சியில் 6 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாகவும் என மொத்தம் 24 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாகவும், 19 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமான வாக்குச் சாவடிகளாகவும் கண்டறியப்பட்டுள்ளன.

அபிராமம் பேரூராட்சி யில் 15 வாக்குச்சாவடிகள், கமுதி பேரூராட்சியில் 15 வாக்குச்சாவடிகள், மண்டபம் பேரூராட்சியில் 18 வாக்குச்சாவடிகளட, முதுகுளத்தூர் பேரூராட்சி யில் 15 வாக்குச்சாவடிகள், ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் 15 வாக்குச் சாவடிகள், சாயல்குடி பேரூராட்சியில் 15 வாக்குச் சாவடிகள், தொண்டி பேரூராட்சியில் 18 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 111 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

இதில் அபிராமம் பேரூராட்சியில் 4 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாகவும், கமுதி பேரூராட்சியில் 3 வாக்குச்சாவடிகள்  மிகவும் பதற்றமான வாக்குச் சாவடிகளாகவும் அறிவிக் கப்பட்டுள்ளது.

மண்டபம் பேரூராட்சியில் 10 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச் சாவடி களாகவும், முதுகுளத்தூர் பேரூராட்சியில் 3 வாக்குச் சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாகவும், ஆர்.எஸ்.மங்கலம் பேரூ ராட்சியில் 6 வாக்குச் சாவடிகள் மிகவும் பதற்ற மான வாக்குச் சாவடி களாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

சாயல்குடி பேரூராட்சி யில் 5  வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளாகவும், தொண்டி பேரூராட்சியில் 5 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமான வாக்குச் சாவடிகளாகவும் என மொத்தம் 17 வாக்குச் சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாகவும், 19 வாக்குச்சாவடிகள்  மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளாகவும் பேரூராட்சி பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில்  நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் மொத்தம் 79 வாக்குச்சாவடிகள் பதற்றம் மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com