

ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் சாயல்குடி, மண்டபம், அபிராமம், தொண்டி, கமுதி, முதுகுளத்தூர், ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய 7 பேரூராட்சிகள் உள்ளன. இங்கு நடைபெற்ற தேர்தல் முடிவுகளில் சுயேட்சை வேட்பாளர்கள் கணிசமான வெற்றிகளை பெற்றுள்ளனர்.
சாயல்குடி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளிலும் சுயேட்சைகளே வெற்றி பெற்றுள்ளனர். அ.தி.மு.க., தி.மு.க. ஒருஇடம்கூட பிடிக்கவில்லை.
மண்டபம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 18 வார்டுகளில் தி.மு.க. 12, சுயேட்சை 5, அ.தி.மு.க. 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
15 வார்டுகள் கொண்ட அபிராமம் பேரூராட்சியில் தி.மு.க. 11, அ.தி.மு.க. 2, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலா 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
தொண்டி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க. 8 இடங்களையும், சுயேட்சை 4, அ.தி.மு.க. 2, காங்கிரஸ் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
கமுதி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 இடங்களில் சுயேட்சை 14 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. பா.ஜனதா 1 இடத்தை பிடித்துள்ளது.
முதுகுளத்தூர் பேரூராட்சியில் 15 வார்டுகளில் தி.மு.க. 5, சுயேட்சை 6, அ.தி.மு.க. 2, அ.ம.மு.க. 2 வார்டுகளை பிடித்துள்ளன.
ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் தி.மு.க. 13, பா.ஜனதா, காங்கிரஸ் தலா 1 வார்டில் வெற்றி பெற்றுள்ளது.
சாயல்குடியில் மண்டபம், தொண்டி, கமுதி, முதுகுளத்தூர் ஆகிய பேரூராட்சிகளில் சுயேட்சை வேட்பாளர்கள் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த பேரூராட்சிகளில் தலைவர், துணைத்தலைவர் தேர்தல் நடக்கும்போது இவர்களின் பங்கு முக்கியமானதாக இருக்கும்.