25 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.110.73 கோடி பயிர் கடன் கலெக்டர் தகவல்

ராமநாதபுரம், மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் சங்கர் லால் குமாவத் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
கலெக்டர் சங்கர்லால் குமாவத் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
கலெக்டர் சங்கர்லால் குமாவத் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
Published on

ராமநாதபுரம்

ராமநாதபுரம், மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் சங்கர் லால் குமாவத் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

இதில் கலெக்டர் பேசியதாவது:-

நீர் நிலைப் புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வனவிலங்குகளால் ஏற்படும் பாதிப்பு குறித்து வனத்துறை அலுவலர்கள் பயிர் பாதிப்பு குறித்த அறிக்கையினை சமர்ப்பிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வருவாய் துறை மற்றும் வேளாண்மைத் துறையினர் இந்த அறிக்கையின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக எவ்வித தொய்வும் இன்றி இழப்பீடு பெற்றுத்தர வேண்டும்.

 நெடுஞ்சாலை அருகில் உள்ள நிலங்களில் பெய்யும் மழை நீர் தேங்காமல் சீராக செல்வதற்கு உரிய இடங்களில் குழாய்கள் வைக்கப்பட்டு பராமரிக்க வேண்டும். உர தட்டுப்பாட்டை போக்குவதற்கு போதுமான உரம் இருப்பு வைப்பதற்காக கூட்டுறவுத் துறை மூலம் நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வழங்கும் மனு மீது துறை ரீதியாக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

2021-22 ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 61 கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துகளுக்கும் பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேற்கண்ட கிராமங்களில் அடிப்படை தகவல்கள் சேகரிக்கப்பட்டு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி முடிவுற்றது.  இந்த திட்டத்தின் கீழ் 61 தரிசு நில தொகுப்புகள் தேர்வு செய்யப்பட்டு அவற்றில் பயனாளிகள் தேர்வு நடைபெற்று வருகிறது. 

நடப்பாண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 114 கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துகளுக்கும் பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு அடிப்படை தகவல்கள் சேகரிக்கும் பணிநடை பெற்றுவருகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 1763 கண்மாய்களில் 649 கண்மாய்களில் 25 சதவீதம் முதல் 50 சதவீதம் கொள்ளளவிலும், 274 கண்மாய்களில் 50 சதவீதம் முதல் 90 சதவீதம் கொள்ளளவிலும், 680 கண்மாய்களில் 25 சதவீதத்திற்கும் குறைவாகவும், 160 கண்மாய்கள் வறண்ட நிலையிலும் உள்ளன. 

2021-22 ம் ஆண்டில் இதுவரையிலும் கூட்டுறவுத்துறை மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் 25 ஆயிரத்து 253விவசாயிகளுக்கு ரூ.110.73 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், வேளாண்மைத் துறை இணை இயக்குநர் டாம் 

பி சைலஸ், கூட்டுறவுத் சங்கங்களின் இணைப் பதிவாளர் ராஜேந்திர பிரசாத், வேளாண்மைத்துறை துணைஇயக்குநர் சேக் அப்துல்லா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனிக்கொடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com