கபிலர்மலையில் அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,250-க்கு விற்பனை

கபிலர்மலையில் அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,250-க்கு விற்பனையானது.
அண்ணாநகர் பகுதியில் அச்சுவெல்லம் தயாரித்து உலர வைத்திருந்தபோது எடுத்தபடம்.
அண்ணாநகர் பகுதியில் அச்சுவெல்லம் தயாரித்து உலர வைத்திருந்தபோது எடுத்தபடம்.
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா அண்ணாநகர், செல்லப்பம்பாளையம், பெரிய மருதூர், சின்ன மருதூர், சின்ன சோளிபாளையம், ஆனங்கூர், பிலிக்கல்பாளையம் , அய்யம்பாளையம், வடகரையாத்தூர், ஜேடர்பாளையம், கொத்தமங்கலம், மாரப்பம்பாளையம், சோழசிராமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர். கரும்பை வெட்டி செல்வதற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ளனர்.

பதிவு செய்யாத விவசாயிகள் தங்களின் கரும்புகளை வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் கணக்கில் விற்பனை செய்து வருகின்றனர்.வாங்கிய கரும்புகளை சாறு பிழிந்து பாகு ஆக்கி அச்சு வெல்லம் மற்றும் உருண்டை வெல்லம் தயாரிக்கின்றனர் .பின்னர் வெல்லங்களைநன்கு உலர வைத்து 30 கிலோ கொண்ட சிப்பங்களாக தயார் செய்கின்றனர். தயார் செய்யப்பட்ட வெல்ல சிப்பங்களை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பிலிக்கல் பாளையத்தில் செயல்பட்டு வரும் வெல்லம ஏல சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர் .

வெல்ல சிப்பங்களை வாங்கிச் செல்வதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து தங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு வெல்ல சிப்பங்களை வாங்கி லாரிகள் மூலம் தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தராஞ்சல் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர் .

கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ1,180-க்கும், அச்சுவெல்லம் ரூ1,190- க்கும் விற்பனையானது. நேற்று 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம்ரூ 1,220-க்கும், அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ .1,250-க்கும் விற்பனையானது. கரும்பு ஒரு டன் ரூ.2,500 வரை விற்பனையாகிறது. வரத்து குறைவால் வெல்லம் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com