கொம்பாக்கம் அரசு பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு

கொம்பாக்கம் அரசு பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்ற காட்சி.
டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்ற காட்சி.
Published on

புதுச்சேரி:

கொம்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளியில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியை சாந்தகுமாரி தலைமை தாங்கினார். முருங்கப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர்கள்  கார்த்திகேயன், ஸ்ரீதர், விஷ்வகுமார் ஆகியோர் மாணவர்களுக்கு டெங்கு நோய் உள்ளிட்ட விழிப்புணர்வு குறித்தும், ஆரோக்கிய உணவு முறைகள், சுத்தமான பழக்கவழக்கங்கள் ஆகியவை குறித்தும் சிறப்புரையாற்றினர்.

ஆசிரியர் சத்தியமூர்த்தி வரவேற்றார். அர்ஜுனன் நன்றி கூறினார். வனிதா நிகழ்ச்சியை தொகுத்தளித்தார். ஆசிரியர்கள் மணி, வெங்கடபிரியா, சுகந்த பிரியா, ஊழியர் சாந்தலட்சுமி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com