ரத்ததான முகாம்

புனித வெள்ளியையொட்டி ரத்ததான முகாம் நடந்தது
ரத்ததான முகாம் நடந்த காட்சி
ரத்ததான முகாம் நடந்த காட்சி
Published on

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுவை கிளை மற்றும் சி.எஸ்.ஐ. செயின்ட் ஜான் சர்ச் இணைந்து புனித வெள்ளியையொட்டி சிறப்பு ரத்ததான முகாமை நடத்தியது.  

ஹென்றி ஜெபா  ரிச்சர்ட் தலைமை தாங்கினார். இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுவை கிளையின் சேர்மன் டாக்டர்  லட்சுமிபதி நிர்வாக குழு உறுப்பினர் அய்யனார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ரத்ததான முகாமை இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர் டயானா தலைமையில் மருத்துவ குழுவினர்  தன்னார்வலர்களிடம் ரத்தம் சேகரித்தனர். 

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுவை கிளை உறுப்பினர்கள் குப்புசாமி, ஸ்டீபன் செல்வராஜ், வின்சன்ட், ஆதிமூலம் மற்றும் பயிற்சி ஆயர் பிரேம்குமார் ஆகியோர் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com