லாரி மீது பைக் மோதி என்ஜினீயர் பலி

அகரம்சீகூர் அருகே சாலையில் நின்ற லாரி மீது பைக் மோதி என்ஜினீயர் பலியானார்மங்களமேடு போலீசார் வினோத்குமாரின் உடலை கைப்பறறி விசாரணை நடத்தி வருகின்றனர்
லாரி மீது  பைக் மோதி என்ஜினீயர் பலி
Published on

அகரம்சீகூர்,

விழுப்புரம் மாவட்டம் மண்டகப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜாராமன் மகன் வினோத்குமார் (வயது 32).இவை பெரம்பலூர் மாவட்டம் விஜயகோபாலபுரத்தில் இயங்கி வரும் எம்.ஆர்.எப் தொழிற்சாலையில் சேஃப்டி என்ஜினியராக பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில் வினோத்குமார் தனது சொந்த வேலையாக இருசக்கர வாகனத்தில் வாலிகண்டபுரம் சென்றார். அங்கு தனது வேலைகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பினார்.திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தார். அப்போது குன்னம் வட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது இவர் மோதினார்.இதில் தூக்கி வீசப்பட்ட வினோத்குமார், பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.இச்சம்பவம் அறிந்து விரைந்து வந்த மங்களமேடு போலீசார் வினோத்குமாரின் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com