கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதுலால்குடி கூட்டுறவு மேலாண்மை நிலைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது
கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
Published on

பெரம்பலூர்,

தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கமாக பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படும் லால்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் (துணைப்பயிற்சி நிலையம்) 2023-24-ம் ஆண்டு 23-வது அஞ்சல் வழி மற்றும் பகுதி நேர (மாற்றத்திற்குட்பட்டது) கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி (புதிய பாட்திட்டத்தின்படி) விரைவில் தொடங்கப்பட உள்ளது.இதற்கான விண்ணப்பங்கள் www.tncuicm.com என்ற இணையதள முகவரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம் ரூ.100-ஐ இணையவழியில் செலுத்த வேண்டும்.10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று ப்ளஸ்-2 தேர்ச்சி பெற்ற வர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் www.tncuicm.com என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். லால்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையம் மற்றும் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தினை அணுகி விவரங்களை பெற்றுக் கொள்ளலாம்.விண்ணப்பத்தினை வருகிற 30-ந் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com