குறுவட்ட அளவிலான இறகு பந்து போட்டியில் பழைய குற்றாலம் ஹில்டன் பள்ளி மாணவர்கள் முதலிடம்

தென்காசி மாவட்டம் குறுவட்ட அளவிலான இறகுப்பந்தாட்டம் போட்டிகள் தென்காசியில் ஜெகநாதன் அரங்கில் நடைபெற்றது.பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஜூனியர் மற்றும் சூப்பர் சீனியர் பிரிவில் முதலிடமும் மற்றும் சீனியர் பிரிவில் 2-ம் இடமும் பிடித்தனர்.
இறகுப்பந்து போட்டியில் குறுவட்ட அளவில் முதல் இடம் பிடித்த மாணவிகளுடன் பள்ளி தாளாளர் ரெ. ஜெ. வே.பெல், கஸ்தூரி பெல் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள்.
இறகுப்பந்து போட்டியில் குறுவட்ட அளவில் முதல் இடம் பிடித்த மாணவிகளுடன் பள்ளி தாளாளர் ரெ. ஜெ. வே.பெல், கஸ்தூரி பெல் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள்.
Published on

தென்காசி:

தென்காசி மாவட்டம் குறுவட்ட அளவிலான இறகுப்பந்தாட்டம் போட்டிகள் தென்காசியில் ஜெகநாதன் அரங்கில் நடைபெற்றது.அதில் ஒற்றையர், இரட்டையர் பிரிவில் பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஜூனியர் மற்றும் சூப்பர் சீனியர் பிரிவில் முதலிடமும் மற்றும் சீனியர் பிரிவில் 2-ம் இடமும் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி தாளாளர் ரெ. ஜெ. வே. பெல், செயலாளர் கஸ்தூரி பெல், பள்ளி முதல்வர் ராபர்ட் பென், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் பாராட்டினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com