கோவையில் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை

மோட்டார் சைக்கிள் ஓர்க்சாப்பில் சூப்பர்வைசராக வேலை செய்து வந்தார்.முத்துகுமார் சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் அதிப்பட்டு வந்தார்.
கோவையில் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை
Published on

கோவை

கோவை மலுமிச்சம்பட்டி உடையார் வீதியை சேர்ந்தவர் முத்துகுமார் (வயது 33). இவர் அங்குள்ள மோட்டார் சைக்கிள் ஓர்க்சாப்பில் சூப்பர்வைசராக வேலை செய்து வந்தார்.

இவருக்கும் காவியா (27) என்பருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. காவியா தற்போது 2 மாதம் கர்ப்பமாக உள்ளார். இந்த நிலையில் முத்துகுமார் சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் அதிப்பட்டு வந்தார்.

இதனால் அவருக்கு வேலையில் சரியாக கவணம் செலுத்த முடியவில்லை. இதனை நினைத்து அவர் மனவேதனை அடைந்து வந்தார். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.

இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து செட்டிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமான 8 மாதத்தில் புதுமாப்பிள்ளை 2 மாதம் கர்ப்பிணி மனைவியை தவிக்க விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com