மூலைக்கரைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம்

புதிய கட்டிடத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. மூலைக்கரைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.
மூலைக்கரைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ சேவையை தொடங்கி வைத்து ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பேசிய போது எடுத்தபடம்.
மூலைக்கரைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ சேவையை தொடங்கி வைத்து ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பேசிய போது எடுத்தபடம்.
Published on

நெல்லை:

மூலைக்கரைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வள்ளியூரில் நடந்த நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் இன்று நேரில் சென்று மூலைக்கரைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு, பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் மருத்துவ சேவையை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகியநம்பி, மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி தலைவர் பார்வதி, மூலைக்கரைப்பட்டி காங்கிரஸ் நகர தலைவர் முத்துகிருஷ்ணன், வட்டார தலைவர்கள் நளன், ராமஜெயம், மூலைக்கரைப்பட்டி தி.மு.க. நகர தலைவர் முருகையா பாண்டியன், வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com