search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டுதல் உள்பட  ஒரே நாளில் 30 சாதனைகள் செய்து அசத்திய நெல்லை மாணவி
    X

    கண்களை கட்டிக்கொண்டு சாதனைகள் செய்து காட்டிய மாணவி பிரிஷா.

    கண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டுதல் உள்பட ஒரே நாளில் 30 சாதனைகள் செய்து அசத்திய நெல்லை மாணவி

    • பல திறமைகளை செய்து சாதனை படைத்துள்ள இவருக்கு குளோபல் யுனிவர்சிட்டி சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளது.
    • கண்களை கட்டிக்கொண்டு கையில் வளையத்தை சுத்திக்கொண்டே சைக்கிள் ஓட்டுதல் உட்பட 30 நிகழ்வுகளை செய்து காட்டி உலக சாதனை படைத்துள்ளார்.

    நெல்லை:

    நெல்லை வண்ணார் பேட்டையை சேர்ந்த கார்த்திகேயன்- தேவிப் பிரியா தம்பதியின் மகள் பிரிஷா(வயது 14). இவர் 9- ம் வகுப்பு படித்து வரு கிறார்.

    இந்த மாணவி 2 வயதில் இருந்தே யோகாசனங்கள் கற்று இதுவரை 70 உலக சாதனைகளை படைத் துள்ளார். மேலும் 200-க்கும் மேற்பட்ட தங்க பதக்கங்கள், கோப்பைகள், கேடயங்கள், சான்றிதழ்கள், விருதுகளையும் பெற்றுள்ளார்.

    உலகிலேயே இளம் வயதில் அதிக உலக சாதனை கள், யோகாசனங்கள், நீச்சல் மற்றும் கண்களைக் கட்டிக் கொண்டு பல திறமைகளை செய்து சாதனை படைத்துள்ள இவருக்கு குளோபல் யுனிவர்சிட்டி சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளது.

    மேலும் இளம் வயதி லேயே 3 முனைவர் பட்டங் களையும் முதன் முறையாக இவர் பெற்றார். இளம் வயது யோகா ஆசிரியர் என்ற சான்றிதழை மத்திய அரசு இந்த மாணவிக்கு வழங்கி கவுரவித்துள்ளது .

    இந்த நிலையில் 70-வது உலக சாதனைகள் செய்துள்ள பிரிஷா தனது 100-வது சாதனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு இன்று கண்களை கட்டிக்கொண்டு 30 நிகழ்வுகளை செய்து தனது 100-வது உலக சாதனையை நிறைவு செய்துள்ளார்.

    30 சாதனைகள்

    பாளையில் உள்ள ஒரு கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி யில் நோபல் வேர்ல்டு ரெகார்ட் நிறுவனம் முன்பு மாணவ மாணவிகள் முன்னிலையில் 20 நொடிகளில் கண்களை கட்டிக்கொண்டு வாமதேவ ஆசனத்தில் அதிக பொருட் களை அடையாளம் காணுதல், கண்களைக் கட்டிக் கொண்டு திரையில் தெரியும் ஆசனங்களை மிக வேகமாக செய்வது, கண்களை கட்டிக் கொண்டு மனித உடலில் கட்டப் பட்டுள்ள பலூன்களை உடைத்தல், மேலும் கண் களை கட்டிக்கொண்டு 20 நொடிகளில் 5 மீட்டர் தூரத்தில் காட்டும் சைகை களை அதிக எண்ணிக்கை யில் அடையாளம் காட்டுதல், கண்களைக் கட்டிக் கொண்டு அதிக தூரம் சைக்கிள் ஓட்டுதல், கண் களை கட்டிக்கொண்டு ஒரு கையால் சைக்கிள் ஓட்டுதல் மற்றும் கையில் வளையத்தை சுத்திக்கொண்டே சைக்கிள் ஓட்டுதல் உட்பட 30 நிகழ்வு களை செய்து காட்டி உலக சாதனை படைத்துள்ளார்.

    Next Story
    ×