என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சங்கராபுரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்- டாஸ்மாக் கடை ஊழியர் சாவு
  X

  சங்கராபுரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்- டாஸ்மாக் கடை ஊழியர் சாவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சங்கராபுரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்- டாஸ்மாக் கடை ஊழியர் விபத்தில் பலியானார்.
  • வேலு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி வேலு இன்று காலை இறந்தார்.

  கள்ளக்குறிச்சி:

  கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள அத்தியூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலு (வயது 26).இவர் பகண்டை கூட்டு ரோடு இளையனார்குப்பம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார்.

  நேற்று இரவு கடையில் வியாபாரம் முடிந்து வேலு மோட்டார் சைக்கிளில் அத்தியூர் நோக்கி சென்றார். அத்தியூர் பால ஓடைபகுதியில் சென்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ேமாதியது. இந்த விபத்தில் வேலு படுகாயம் அைடந்தார்.

  தகவல் அறிந்த சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சையது பாஷா, சோலை ஆகியோர் வேலுவை மீடடு சங்கராபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் வேலு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி வேலு இன்று காலை இறந்தார்.

  விபத்து குறித்து பகண்டை கூட்டு ரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சூர்யா, பாபு ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

  Next Story
  ×