விஷ்வ ஹிந்து பரிஷத் பண்பு பயிற்சி முகாம்

குமாரபாளையத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் பண்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.
பயிற்சி  முகாம் நடைபெற்றபோது எடுத்த படம்.
பயிற்சி முகாம் நடைபெற்றபோது எடுத்த படம்.
Published on

குமாரபாளையம்:

குமாரபாளையத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில பண்பு பயிற்சி  முகாம் மாநில செயலர் இளங்கோ  தலைமையில் நடைபெற்றது.

 வருகிற  17-ந்தேதி வரை நடைபெறவுள்ள பஜ்ரங்தள் முகாம், விஷ்வ ஹிந்து பரிசத் முகாம்  தனியார்  பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற உள்ளது. 

இந்த முகாம்களில் இளைஞர்களுக்கு சிலம்பம், கராத்தே பயிற்சிகள் வழங்கப்படும். சிறப்பு பேச்சாளர்கள் பங்கேற்கும் கருத்தரங்கங்கள் நடைபெறும். பாரத நாட்டின் பெருமைகள், நம் நாட்டின் கலைகளின் பெருமைகள், முன்னோர்கள் குறித்த தகவல்கள்  உள்ளிட்ட பல தலைப்புகளில் பேசவுள்ளனர். 

தொடக்க நிகழ்ச்சியில் கோட்ட பொறுப்பாளர் அழகிரி, மாநில அமைப்பு செயலர் இராமன், மாநில இணை செயலர் கிரண், பஜ்ரங்தள் மாநில நிர்வாகிகள் உள்பட பலரும் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com