ராசிபுரத்தில் ரூ.82 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்

ராசிபுரத்தில் ரூ.82 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம் விடப்பட்டது.
.
.
Published on

ராசிபுரம்:

ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ். சங்க கிளை வளாகம் நாமகிரிப்பேட்டையில் உள்ளது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று மஞ்சள் ஏலம் நடைபெறும். நேற்று வழக்கம்போல் மஞ்சள் ஏலம் நடந்தது. 

ஏலத்திற்கு சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மஞ்சளை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து மஞ்சள் ஏலம் எடுத்தனர். நேற்று நடந்த ஏலத்தில் 1,680 மஞ்சள் மூட்டைகள் ரூ.82 லட்சத்திற்கு ஏலம் போனது. 

இந்த ஏலத்தில் விரலி ரகம் 1,150 மூட்டைகளும், உருண்டை ரகம் 475 மூட்டைகளும், பனங்காலி ரகம் 55 மூட்டைகளும் கொண்டு வரப்பட்டு இருந்தன. 

இதில் விரலி ரகம் குறைந்தபட்சம் ஒரு குவின்டால் ரூ.6,439 முதல் அதிகபட்சமாக ஒரு குவின்டால் ரூ.10,229-க்கும், உருண்டை ரகம் குறைந்தபட்சம் ரூ.5,890-க்கும், அதிகப்பட்சமாக ஒரு குவின்டால் ரூ.7,669-க்கும், பனங்காலி ரகம் குறைந்தபட்சம் ஒரு குவின்டால் ரூ.13,689-க்கும், அதிகப்பட்சமாக ரூ.21,709-க்கும் ஏலம் விடப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com