

பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் இடி, சூறைக் காற்றுடன் கூடிய கன மழை பெய்தது.
ஆனங்கூர், வடகரையாத்துர், ஜேடர்பாளையம், அய்யம்பாளையம், பிலிக்கல்பாளையம், அண்ணாநகர், கொந்தளம், வெங்கரை, பாண்டமங்கலம், பொத்தனூர், பரமத்திவேலூர், நன்செய் இடையாறு, உள்ளிட்ட பல்வேறு வகையில் நேற்று இரவு சுமார் 8. மணிக்கு மேல் கடும் இடி மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்தது.
அதனை தொடர்ந்து இடி, காற்றுடன் கன மழை பெய்ய ஆரம்பித்தது. இதனால் சாலை வழியாக சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நனைந்து கொண்டே சென்று அவதிப்பட்டனர்.
அதேபோல் சாலை ஓரத்தில் போடப்பட்டிருந்த பலகாரக் கடைகள், உணவு கடைகள், பழக்கடைகள் மற்றும் பல்வேறு கடைக்காரர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். இந்த மழையின் காரணமாக பொதுமக்களை வாட்டி வதைத்த கடும் வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டது.