இறந்த காமெடி நடிகர் குடும்பத்தாருக்கு நிதி உதவி செய்த நடிகர்

குமாரபாளையத்தில் இறந்த காமெடி நடிகர் குடும்பத்தாருக்கு நடிகர் நிதி உதவி அளித்தார்.
.
.
Published on

குமாரபாளையம்:

குமாரபாளையம் அருகே பச்சாம்பாளையம், அல்லிநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் லிட்டில் ஜான் எனப்படும்  தனசேகரன்(வயது 43). இவர் வெங்காயம், ஐம்புலன் உள்பட பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். 

நடன குழுக்களில் நடனம் ஆடியும் வந்தார். கடந்த 3&ந் திருச்செங்கோடு அருகே கோழிக்கால்நத்தம் என்ற பகுதியில் கோவில் திருவிழா வில் நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர் மறுநாள் காலை  வீட்டிற்கு  வந்து சாப்பிட்டு படுத்தவர் எழுந்திருக்கவில்லை. 

டாக்டர் வந்து  பரிசோதித்து பார்த்ததில் அவர் இறந்து விட்டது தெரியவந்தது. இதனை வெங்காயம் படத்தில் கதாநாயகனாக நடித்த நடிகர் அலெக்சாண்டர் சவுந்திரராஜன் அறிந்து அதிர்ச்சியடைந்தார். 

இதையடுத்து தனசேகரன் குடும்பத்தாருக்கு தன் அலுவலக பணியாளர்கள் மூலமாக  லிட்டில் ஜானின்  பெற்றோரிடம் ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com