

குமாரபாளையம்:
தமிழ் மாத முதல் ஞாயிற்று கிழமையையொட்டி குமாரபாளையம் அக்ரஹாரம் லட்சுமி–நாராயண சுவாமி கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடத்தப்பட்டன.
பக்தர்கள் பக்தி பஜனை பாடல்கள் பாடி சுவாமியை வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
திருவள்ளுவர் நகர் பஞ்சமுக ஆஞ்சேநேயர் கோவில், விட்டலபுரி பாண்டுரங்கர் கோவில், ராமர் கோவில் உள்ளிட்ட பல பெருமாள் கோவில்களில் அனுமனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடத்தப்பட்டன.