சக்தி கண்ணனூர் புதுமாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

பரமத்திவேலூர் பேட்டை சக்தி கண்ணனூர் புதுமாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
புதுமாரியம்மன் வெள்ளிக் கவச அலங்காரத்தில் அருள்பாலித்தபோது எடுத்த படம்.
புதுமாரியம்மன் வெள்ளிக் கவச அலங்காரத்தில் அருள்பாலித்தபோது எடுத்த படம்.
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பேட்டை ஸ்ரீ சக்தி கண்ணனூர் புதுமாரியம்மன் ஆலயத்தில் சித்திரை மாத உற்சவ விழாவினை முன்னிட்டு மூலவர் அம்மனுக்குபால் தயிர் பன்னீர் இளநீர் சந்தனம் மஞ்சள் திருமஞ்சனம் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. 

அம்மன் வெள்ளிக் கவச அலங்காரத்திலும், உற்சவர் அம்மன் சிறப்பு அலங்கார த்துடன் சப்பாரத்தில் புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். 

அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com