நாமக்கல்லில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

நாமக்கல்லில் அரசு அலுவலர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.
உறுதிமொழி ஏற்ற அலுவலர்கள்.
உறுதிமொழி ஏற்ற அலுவலர்கள்.
Published on

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட  கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்  காந்தியடிகள் நினைவு நாளையொட்டி தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை மாவட்ட வருவாய் அலுவலர்  கதிரேசன் அவர்கள் தலைமையில் அனைத்துதுறை அலுவலர்கள் ஏற்றனர்.

நிகழ்ச்சியில்  இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத உளமார்ந்த பற்றுள்ள இந்தியக் குடிமகன் ஆகிய நான், நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது என்பதை அறிவேன். தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு, எவர் மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைபிடிக்க மாட்டேன் என்று இதனால் உளமார உறுதியளிக்கிறேன். 

அரசியலமைப்பின் அடிப்படை கருத்திற்கிணங்க, சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன். இந்திய அரசியலமைப்பின்பால் எனக்குள்ள முழுப்பற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்குமென்றும் இதனால் உளமார உறுதியளிக்கிறேன் என்று அனைத்துதுறை அலுவலர்கள் உறுதி ஏற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் ரமேஷ் உள்பட அரசு அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com