பாலக்கோடு அருகே 6 மாத பெண் குழந்தை மர்ம சாவு

பாலக்கோடு அருகே கூலித்தொழிலாளியின் 6 மாத பெண் குழந்தை மர்மமான முறையில் இறந்தது. இதுகுறித்து பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பாலக்கோடு:

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கொலசனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கமலநாதன. கூலிதொழிலாளி. இவரது மனைவி தமிழ்மொழி. 

இவர்களுக்கு கனிஷ்தா என்ற 3 வயதில் ஒரு பெண் குழந்தையும், 6 மாதத்தில் மனுசாதிரி என்ற பெண் குழந்தையும் உள்ளது.

இந்த நிலையில் குழந்தை மனுசாதிரிக்கு திடீரென நேற்று உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் மகேந்திரமங்கலம் போலீசார் வ¤ரைந்து சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  பாலக்கோடு அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.

2-வது பெண் எதனால் இறந்தது? வேறெதும் காரணமா? என்று பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com