பெற்றோரை தவறவிட்ட சிறுமி போலீசாரால் மீட்டு ஒப்படைப்பு

திண்டுக்கல் அருகே ரெயிலில் பெற்றோரை தவறவிட்ட சிறுமியை போலீசார் உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
மீட்கப்பட்ட சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்.
மீட்கப்பட்ட சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்.
Published on: 

திண்டுக்கல்:

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள லட்சுமிபுரம் தெற்குதெருவை சேர்ந்தவர் கனகராஜ்(40). இவர் தனது மனைவி, மகள் அனுஷ்கா(10) ஆகியோருடன் ராமேஸ்வரத்திற்கு இறந்த தனது தந்தைக்கு திதி கொடுப்பதற்காக சென்றார்.

காரியங்கள் முடிந்த பிறகு மீண்டும் ரெயிலில் சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தார். மதுரை ரெயில் நிலையத்தில் வந்து இறங்கியபோது அவரது மகள் மட்டும் ரெயிலேயே இருந்துவிட்டார்.

சிறிதுநேரம் கழித்து தேடியபோது அவரை காணவில்லை. ஆனால் அதற்குள் ரெயில் சென்று விட்டது. இது குறித்து மதுரை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அடுத்தடுத்த ரெயில்நிலையங்களில் தகவல் தெரிவித்து சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

கொடைரோடு ரெயில்நிலையத்தில் ரெயில் வந்தபோது பெண் காவலர் மேனகா, ஏட்டு பிரேம்குமார் மற்றும் பாண்டியன், அழகர்சாமி ஆகியோர் சிறுமி ரெயில்பெட்டியில் உறங்கியதை கண்டுபிடித்த னர்.

சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் சிறுமி மீட்கப்பட்டது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். இதனைதொடர்ந்து பெற்றோர் தங்களது மகளை அழைத்து சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com