என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அன்பழகன் படத்திற்கு அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி மரியாதை
  X

  அன்பழகன் உருவப்படத்திற்கு அமைச்சர் கீதாஜீவன் மலர் தூவி மரியாதை செலுத்திய காட்சி. அருகில் மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் பலர் உள்ளனர்.

  தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அன்பழகன் படத்திற்கு அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி மரியாதை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அன்பழகன் நூற்றாண்டு விழாவை தி.மு.க.வினர் தமிழகம் முழுவதும் கடைபிடிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.
  • கலைஞர் அரங்கில் அலங்கரிக்கப்பட்டிருந்த அன்பழகன் படத்திற்குஅமைச்சர் கீதாஜீவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

  தூத்துக்குடி:

  தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், அக்கட்சி யின் முன்னாள் பொதுச்செய லாளர் அன்பழகன் நூற்றாண்டு விழாவை தமிழகம் முழுவதும் கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கிணங்க தூத்துக்குடியில் உள்ள கலைஞர் அரங்கில் அலங்கரிக்கப்பட்டிருந்த அன்பழகன் படத்திற்கு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மலர் தூவி மரியாதை செய்தனர்.

  இதில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலளார்கள் ராஜ்மோகன்செல்வின், ஆறுமுகம், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, கலைச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாவட்ட அணி அமைப்பாளர்கள் மதியழகன், அந்தோணி ஸ்டாலின், அன்பழகன், ரமேஷ், அபிராமிநாதன், கஸ்தூரிதங்கம், உமாதேவி, பரமசிவம், ஜெபசிங், மாநில பேச்சாளர் சரத்பாலா, துணை அமைப்பாளர்கள் நலம் ராஜேந்திரன், வக்கீல் சீனிவாசன், அருணாதேவி, ஜீவன்ஜேக்கப், அந்தோணிகண்ணன், சரவணன், கவிதாதேவி, ஜேசையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  இதே போல் மாப்பிள்ளையூரணியில் சிலோன் காலணி பகுதியில் அலங்கரிக்கப்பட்ட அன்ப ழகன் படத்திற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×