தென்மண்டல தபால்துறை வாடிக்கையாளர் குறைதீர்க்கும் முகாம்

தென்மண்டல தபால்துறை வாடிக்கையாளர் குறைதீர்க்கும் முகாம் மதுரையில் 20-ந் தேதி நடக்கிறது. தபால் கவரின் முன் பக்கத்தில் தபால் சேவை குறைதீர்க்கும் முகாம்- டிசம்பர் 2022 என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.
தென்மண்டல தபால்துறை வாடிக்கையாளர் குறைதீர்க்கும் முகாம்
Published on

மதுரை

தென்மண்டல தபால்துறை தலைவர் அலுவலக உதவி இயக்குநர் செந்தில் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தென்மண்டல தபால்துறை தலைவர் அலுவலகத்தின்

கட்டுப்பாட்டில் உள்ள மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியா குமரிமாவட்டங்களில் உள்ள தபால் அலுவலகங்கள் தொடர்பாக வாடிக்கையா ளர்களின் குறைதீர்க்கும் முகாம் வருகிற 20-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. மதுரை பீ.பி.குளத்தில் உள்ள தென்மண்டல தபால் துறைத்தலைவர் அலுவலகத் தில் நடக்கும் இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்ப முள்ள புகார்தாரர்கள், தங்களது புகார் மனுக்களை வருகிற 13-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

மனுவில், தபால் அனுப்பப்பட்ட தேதி, நேரம், அனுப்பியவர் மற்றும் பெறுபவரின் பெயர், முகவரி, ரசீது எண், மணியார்டர், ஸ்பீடுபோஸ்ட், பதிவுத்தபால் ஆகிய விவரங் களை குறிப்பிட வேண்டும். சேமிப்பு வங்கி, தபால்

காப்பீடு, கிராமிய தபால் காப்பீடு உள்ளிட்ட புகார் மனுக்களில், கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயர் மற்றும் முகவரி, பாலிசிதாரரின் பெயர், முகவரி, பணம் செலுத்திய விவரம், பணம் செலுத்திய தபால் அலுவலகத்தின் பெயர், தபால்துறையில் பெறப்பட்ட கடிதங்கள் இருப்பின் அதனையும் இணைக்க வேண்டும்.

இந்த முகாமை பொறுத்த மட்டில் சம்பந்தப்பட்ட தபால் நிலையங்களில் ஏற்கனவே மனு கொடுத்து கோட்ட தபால் கண்காணிப் பாளர் கொடுத்த பதிலில் திருப்தி இல்லாதவர்கள் மட் டும் தங்களது குறைகளை அனுப்ப வேண்டும். புதிய புகார்களின் மீது எந்த நடவ டிக்கையும் எடுக்கப்பட மாட்டாது.

அதேபோல, தனியார் கூரியர் மூலம் அனுப்பும் புகார் மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. புகார் மனுக்களை உதவி இயக்குநர், தபால் துறைத்தலைவர் அலுவலகம், தென் மண்டலம், மதுரை-2 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

தபால் கவரின் முன் பக்கத்தில் தபால் சேவை குறைதீர்க்கும் முகாம்- டிசம்பர் 2022 என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com