முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.தமிழர் தேசம் கட்சி மாநில செயலாளர் வி.எம்.எஸ்.அழகர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
Published on: 

மதுரை

தமிழர் தேசம் கட்சி மாநில செயலாளர் வி.எம்.எஸ்.அழகர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை ஆனையூரில் உள்ள மன்னர் முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் மதுரையில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கினார்.

இந்த விழாவில் தமிழர் தேசம் கட்சி மதுரை மாவட்ட செயலாளர் சிங்ககண்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜ்குமார், இளைஞரணி துனை செயலாளர் ஆதிமுருகன், மாவட்ட மகளிரணி தலைவர் கவிதா, ஒன்றிய செயலாளர் பொய்கை தங்கம், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பிரபு, மாவட்ட இணை செயலாளர் அழகுராஜா, மாவட்ட இளைஞரணி சங்கிலி, நத்தம் ஒன்றியம் பூமி, தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com