search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பா.ம.க. சார்பில் கொடியேற்றி விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
    X

    அலங்காநல்லூர் அருகே முடுவார்பட்டி கிராமத்தில் பா.ம.க. வினர் கட்சியின் கொடியேற்றி விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    பா.ம.க. சார்பில் கொடியேற்றி விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

    • பா.ம.க. சார்பில் கொடியேற்றி விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
    • முனியாண்டி கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே மூடுவார் பட்டி ஊராட்சியில் பாட் டாளி மக்கள் கட்சி தலை வர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளையொட்டி கட்சி யின் கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    மேலும் நேர்மையான அரசியல் குறித்து விழிப்பு ணர்வு உறுதிமொழி எடுத் துக் கொண்டனர். இதற்கு ஒன்றிய பொருளாளர் ரேவதி ராஜ்குமார் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட தலைவர் செல்லம் பட்டி முருகன், ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், மாவட்ட அமைப்பு செயலா ளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    செல்லம்பட்டி ஒன்றிய தலைவர் விஜயகுமார், ஒன்றிய செயலாளர்கள் ஈஸ்வரன், குரு பாலமுருகன், நிர்வாகிகள் நாராயணன், அமரன், முருகன், ராமர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அலங்காநல்லூர் முனி யாண்டி கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    Next Story
    ×