நுகர் பொருள் கிட்டங்கியில் எம்.எல்.ஏ. ஆய்வு

நுகர்பொருள் கிட்டங்கியில் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார். இந்த கிட்டங்கி போக்குவரத்துக்கு இடைஞ்சலாக உள்ளதால் கிட்டங்கியை மாற்றி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
நுகர் பொருள் கிட்டங்கியில் எம்.எல்.ஏ. ஆய்வு
Published on

உசிலம்பட்டி

உசிலம்பட்டியில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியை அய்யப்பன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். கண்காணிப்பாளரிடம், பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் தரமாக உள்ளதா? எனவும், எந்தெந்த பகுதிக்கு பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது? எனவும், கிட்டங்கியில் உள்ள அரிசி, சீனி, பாமாயில் மற்றும் ரேஷன் பொருட்கள் தரமாக உள்ளதா? எனவும் கேட்டறிந்தார். இந்த கிட்டங்கி போக்குவரத்துக்கு இடைஞ்சலாக உள்ளதால் கிட்டங்கியை மாற்றி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதை மாற்றி அமைக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் எம்.எல்.ஏ. தெரிவித்தார். அ.தி.மு.க. நகர செயலாளர் பூமா ராஜா, பேரவை மாநில துணைச் செயலாளர் துரை தனராஜன், மாவட்ட கவுன்சிலர் சுதாகரன் மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com