மாணிக்கம்தாகூர் எம்.பி. பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்

மாணிக்கம்தாகூர் எம்.பி. பிறந்தநாளை முன்னிட்டு சேர்மன் குருசாமி ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கோவிலில் சிறப்பு பூஜைகளும் நடந்தன.
மாணிக்கம்தாகூர் எம்.பி. பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்
Published on

திருமங்கலம்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் கோவா மாநில பொறுப்பாளரும், விருது நகர் பாராளுமன்ற உறுப்பி னருமான மாணிக்கம் தாகூர் பிறந்தநாள் விழா இன்று கொண்டா டப்பட்டது.

இதையொட்டி மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள பேரையூரில் பேரூராட்சி மன்ற தலைவர் கே.கே.குருசாமி தலைமை யில் பேரையூர் பட்டயத்து முக்கு விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

அதன்பின்னர் வி.அம்மா பட்டி அமலா மனநல காப்ப கத்தில் உள்ள அனை வருக்கும் காலை உணவு வழங்கப்பட்டது. மேலும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு உறுப்பி னரும், பேரையூர் பேரூராட்சி மன்ற உறுப்பினருமான கே.கே.ஜி.காமாட்சி, வட்டார தலைவர் கணேசன், நகர் தலைவர் சற்குணன், நிர்வாகிகள் மகாலிங்கம், சுப்பையா, காளிஸ்வரன், சங்கரபாண்டியன், மணிகண்டன், முத்துகிருஷ்ணன், டில்லி ராஜன், முத்து விஜயன், மாசாணம், மலைராஜன், கருத்தப்பாண்டி, ராஜா, முத்தையா, முத்துவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com