கல்லால் தாக்கி ஓட்டல் தொழிலாளி கொலை

திருமங்கலத்தில் கல்லால் தாக்கி ஓட்டல் தொழிலாளி கொலை செய்யப்பட்டார்.
கொலை செய்யப்பட்ட சிக்கந்தர் கனி.
கொலை செய்யப்பட்ட சிக்கந்தர் கனி.
Published on

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் ரெயில்வேலைன் தெருவை சேர்ந்த சிக்கந்தர்கனி (வயது52). இவர் அந்த பகுதியில் உள்ள ஓட்டலில் வடை மாஸ்டராக வேலை பார்த்த வந்தார்.

இவருக்கு திருமணமாகி மனைவி அஸ்மா பேகம் மற்றும் 2 மகள்கள், ஒருமகன் உள்ளனர். 

நேற்று காலை சிக்கந்தர் கனி வீட்டிலிருந்து வெளியே புறப்பட்டு சென்றார். அதன் பிறகு அவர்  வீடு திரும்பவில்லை.  இந்தநிலையில் இன்றுகாலை திருமங்கலம் குண்டாறு ஆறுகண் பாலத்திற்கு கீழே உள்ள காளியம்மன் கோவில் அருகே அவர் பிணமாக கிடப்பதை பார்த்தவர்கள்  திருமங்கலம் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

திருமங்கலம் டி.எஸ்.பி. சிவக்குமார் தலைமையி லான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து  உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.  சிக்கந்தர்கனி தலையில் கல்லைபோட்டு கொலை செய்யப்-பட்டிருப்--பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.  

மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக் கப்பட்டு சம்பவ இடத்தில் போலீசார் ஆய்வு செய்தனர். கொலை சம்பவம்குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு பாஸ்கரன் நேரில் வந்து பார்வையிட்டார். 

சிக்கந்தர் கனி மனைவி அஸ்மாபேகம் அளித்தபுகாரின் அடிப்படையில்  போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com