தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல்?

எரிபொருள் விலை உயர்வு காரணமாக தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா?
தனியார் பஸ்
தனியார் பஸ்
Published on

மதுரை

மதுரை மாவட்டத்தி லிருந்து  விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் நிர்ணயிக்கப்பட்டு உள்ள கட்டணம், அரசு பஸ்கள் உடன் ஒப்பிடுகையில் ஓரளவு குறைவாக இருக்கும். எனவே மதுரையில் பெரும்பாலான பயணிகள் தனியார் பஸ்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மதுரையில் இருந்து இயக்கப்படும் தனியார் பஸ்களில், டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை திருமங்கலத்தில் இருந்து மாட்டுத்தாவணிக்கு தனியார் பஸ்களில் 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இது தற்போது ரூ.30 ஆக அதிகரித்து உள்ளது. இதுதொடர்பாக தனியார் பஸ் நிறுவன கண்டக்டர்கள் சிலரிடம் பேசியபோது, “பெட்ரோல்- டீசல் விலை கட்டுக்கடங்காத வகையில் உயர்ந்து உள்ளது. வாகன பராமரிப்பு செலவும் அதிகரித்து உள்ளது. 

கப்பலூர் டோல்கேட் மற்றும் சிட்டம்பட்டி உள்ளிட்ட சுங்கச்சாவடி களில் நுழைவு கட்டணம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.  எனவே நாங்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கும் மத்தியில் தனியார் பஸ்களை இயக்கி வருகிறோம். பெட்ரோல் டீசல் விலை உயர்வு, டோல்கேட் கட்டண அதிகரிப்பை கருத்தில் கொண்டு கட்டணத்தை சிறிது அளவு உயர்த்தி உள்ளோம். இது அரசு பஸ்கள் உடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட சரிசமமாக இருக்கும் என்று தெரிவித்து உள்ளனர்.

அதே வேளையில் மதுரை மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் பேருந்து கட்டண உயர்வு தொடர்பான தகவலை மறுத்து உள்ளது.

இது தொடர்பாக மதுரை மாவட்ட தனியார் பஸ்கள் கூட்டமைப்பு தலைவர் பாபு கூறுகையில், “மதுரையில் இருந்து வெளி மாவட்டம், மாநகர ங்களுக்கு 110 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

தமிழகத்தில் எரிபொருள் விலை அதிகரித்து உள்ளது. சிட்டம்பட்டி, கப்பலூர் உள்ளிட்ட டோல்கேட் பகுதிகளில் சுங்க கட்டணம் உயர்ந்து உள்ளது என்பது உண்மைதான். இருந்த போதிலும் நாங்கள் தனியார் பேருந்து கட்டண உயர்வை அறிவி க்கவில்லை. 

தமிழகத்தில் தனியார் பஸ்கள் கட்டணம் தொடர்பாக அரசாங்கமே முடிவெடுத்து அறிவிக்கும். எனவே தனியார் பஸ்களில் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்து உள்ளதாக கூறப்படுவது தவறு” என்று தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com