என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  இளைஞர்களுக்கான கலைப்போட்டிகள்
  X

  இளைஞர்களுக்கான கலைப்போட்டிகள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மதுரையில் வருகிற 17-ந் தேதி இளைஞர்களுக்கான கலைப்போட்டிகள் நடக்கிறது.
  • வருகிற 14-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என நேரு யுவகேந்திரா துணை இயக்குனர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

  மதுரை

  மதுரை நேரு யுவகேந்திரா துணை இயக்குனர் செந்தில்குமார் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

  மத்திய விளையாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மதுரை மாவட்ட நேரு யுவ கேந்திரா சார்பில் இளையோர் திருவிழா, அய்யர்பங்களா, நாகனாகுளத்தில் வருகிற 17-ந் தேதி நடக்கிறது.

  இதையொட்டி இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்துடன் தொடர்புடைய ஓவியப் போட்டி, இளம் எழுத்தாள ருக்கான கவிதைபோட்டி, புகைப்படம் எடுத்தல் போட்டி, இந்தியா @ 2047 என்ற தலைப்பில் ஆங்கில பேச்சுப் போட்டி, நாட்டுப்புற கிராமிய இசையுடன் கூடிய வீதி நாடகம், இந்தியா @ 2047 இளையோர் கருத்தரங்கம் ஆகியவை நடக்கிறது.

  இதில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த 15 வயது முதல் 20 வயது வரையான மாணவ-மாணவிகள் கலந்து கொள்ளலாம். இளையோருக்கான போட்டிகளில் 15 வயது முதல் 29 வயது வரையானவர்கள் பங்கேற்கலாம்.

  போட்டிகளில் வெற்றி பெறும் முதல் 3 பேருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்படும். இது தவிர முதல்,2-ம் நிலை வெற்றி பெற்றவர்கள், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கலாம்.

  இந்த நிகழ்ச்சிகளில் பங்கு பெற விரும்புவோர், அதற்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து துணை இயக்குநர், நேரு யுவ கேந்திரா, ஆசாத் தெரு, காந்தி நகர் என்ற முகவரியில் வருகிற 14-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  Next Story
  ×