டயர் வெடித்ததில் தலைகுப்புற கவிழ்ந்த மினி வேன்

சாலையில் டயர் வெடித்ததால் மினி வேன் தலைகுப்புற கவிழந்தது. டிரைவர், கிளீனர் உயிர் தப்பினர்.
டயர் வெடித்ததில் தலைகுப்புற கவிழ்ந்த மினி வேன்
Published on

திருமங்கலம்

மதுரை கருப்பாயூரணி அருகே தனியார் சிமெண்ட் கல் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கிருந்து சிமெண்ட் கல் ஏற்றிக்கொண்டு மினி வேன் புறப்பட்டது. இதனை விக்கி என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் கிளீனர் உட்பட 2 பேர் இருந்தனர்.

திருமங்கலம் அருகே கப்பலூர் 4 வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென வேனின் முன்பக்க டயர் வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் தாறுமாறாக ஓடி சாலையின் நடுவே தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

உயிர் தப்பினர்

விபத்தில் மினி வேன் டிரைவர் மற்றும் கிளீனர் உட்பட 3 பேரும் கதவைத் திறந்து உடனடியாக வெளியே குதித்ததால் உயிர் தப்பினர். சாலையின் நடுவே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மதுரை கப்பலூர் 4 வழிச்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து வந்த பெருங்குடி போலீசார் டிரைவர் விக்கியிடம் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com