நகராட்சி, பேரூராட்சி தலைவர் தி.மு.க. வேட்பாளர்கள்

மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட நகராட்சி, பேரூராட்சி தலைவர் தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு
தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு
Published on

மதுரை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்து வெற்றிபெற்ற வேட்பாளர்கள் கவுன்சிலர்களாக பதவியேற்றுள்ளனர்.  இந்த நிலையில் மாநகராட்சி மேயர், துணைமேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நாளை (4ந் தேதி) நடைபெற உள்ளது. 

இந்த நிலையில் தி.மு.க. மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர்   வேட்பாளர்களை கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதில் மதுரை மாவட்டத்தில் மேலூர் நகராட்சி தலைவர் வேட்பாளராக முகமது யாசின் அறிவிக்கப்பட்டுள்ளார். 

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளுக்கும்  தலைவர் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ராமநாதபுரம்-கார்மேகம், ராமேசுவரம்-நாசர்கான், கீழக்கரை-செகானஸ் ஆபிதா, பரமக்குடி-சேது கருணாநிதி. 

சிவகங்கை மாவட்ட 2 நகராட்சிகளுக்கு தலைவர் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். சிவகங்கை-துரை ஆனந்த், மானாமதுரை-மாரியப்பன் கென்னடி (முன்னாள் எம்.எல்.ஏ.)

விருதுநகர் மாவட்டத்தில் 4 நகராட்சிகளுக்கு தலைவர் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அருப்புக்கோட்டை-சுந்தரலட்சுமி சிவபிரகாசம், சாத்தூர்-குருசாமி, ஸ்ரீவில்லிபுத்தூர்- தங்கம் ரவிகண்ணன், ராஜபாளையம்- பவித்ராஷியாம்.

அலங்காநல்லூர்-ரேணுகாஈஸ்வரி, வாடிப்பட்டி-பால்பாண்டி, ஏ.வல்லாளபட்டி-குமரன்,  டி.கல்லுப்பட்டி-முத்து கணேசன், எழுமலை-ஆர்.பி.ஜெயராமன். 

ஆர்.எஸ்.மங்கலம்-மவுசூரியாபானு, அபிராமம்-பாத்திமாகனி, மண்டபம் (பா.ஜ.)- முதுகுளத்தூர் ஷாஜகான்.

சிங்கம்புணரி-அம்பலமுத்து, நெற்குப்பை-புசாலன், கோட்டையூர்-கார்த்திக்சோலை, கானாடுகாத்தான்- ராதிகா, புதுவயல்-முகமது மீரான், கண்டனூர்-சங்கீதா, திருப்புவனம்-சேங்கைமாறன், இளையான்குடி-செய்யது ஜமீமா.

மல்லாங்கிணறு-துளசிதாஸ், காரியாபட்டி-செந்தில், எஸ்.கொடிக்குளம்-ஜோதிலட்சுமி, சுந்தரபாண்டியம்-ராஜம்மாள், செட்டியார்பட்டி&ஜெயமுருகன், சேத்தூர்-பாலசுப்பிரமணியம், மம்சாபுரம்-தங்க மாங்கனி, வ.புதுப்பட்டி-சுப்புலட்சுமி. 

விடுபட்ட நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தி.மு.க. வேட்பாளர்கள் பெயர்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று துரைமுருகன் அறிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com